வரும் 2015 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள 47 நாடுகளில் இந்தியாவும் உறுப்பு நாடாக இருந்தது. இந்நிலையில், இந்தியா உள்பட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 4 நாடுகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி, அந்த 4 இடங்களுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியா, வங்கதேசம், கத்தார், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 5 நாடுகள் போட்டியிட்டன.
இதில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது. இதேபோல், தாய்லாந்து தவிர மற்ற 3 நாடுகளும் உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த ஆணையத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். உலக அளவில்பினர்களி நடைபெறும் மனித உரிமை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் எழுப்பவும், விவாதிக்கவும் அந்த உறுப்பினர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சீனா, சவூதி அரேபியா, ரஷியா உள்பட 14 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.