பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள, காங்கிரஸ் ,ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஆகிய மூன்று கட்சிகளும் மூவர் கூட்டணி ஏற்படுத்தியுள்ளன.
கிட்டதட்ட 24 ஆண்டுகள் கழித்து அரசியல் எதிரிகளான லாலுவும் நிதிஷும் கைக்கோர்த்து உள்ளார்கள்.
இவர்கள் இருவரும் தற்போது சூறாவளி பிராசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வரும் 19 ஆம் தேதி இவர்கள் இருவரும் ஒரே மேடையில் பிராச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் இரு கட்சி தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளார்கள்.