மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு 1–ந் தேதி முதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதி ஒருவர், 2012 அக்டோபர் முதல் மாவட்ட கூடுதல் மற்றும் செசன்சு நீதிபதியாக பதவி வகித்து வந்தார். பல பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்தார். ஆனால் எந்த காரணமும் சொல்லாமல் இவர் கடந்த மாதம் 15 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதற்கான காரணம் அப்போது தெரியவில்லை.
இப்போது அதற்கு காரணம் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் செக்ஸ் தொல்லையே என்று தெரிய வந்துள்ளது. அவர் பல வழிகளில் இவருக்கு செக்ஸ் தொல்லை தந்துள்ளார். அவரை குத்துப்பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆட சொல்லியுள்ளார். அவரை தனிமையில் அனுபவிக்க நினைத்து உள்ளார். ஆனால் எதற்கும் அந்த பெண் நீதிபதி இணங்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர் இவரை வேறு தொலைவான இடத்துக்கு பணிமாற்றம் செய்து உள்ளார்.
இதனால் தனது மகளின் 12 ஆம் வகுப்பு படிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை தள்ளி வைக்குமாறு கேட்டு உள்ளார் . ஆனால் அதற்கு ஒத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் தனது பெண்மையையும், கற்பையும், மகளின் படிப்பையும் காப்பாற்றுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். இது தொடர்பாக பெண் நீதிபதி, ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய சட்ட மந்திரி உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பி உள்ளார்.
ஒரு நாட்டின் பெண் நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற பெண்களில் நிலைமை ??