BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 3 August 2014

இந்தியாவின் பணக்கார கடவுள்கள் !

வணக்கம், 

பணம் இருந்தால் தான் மதிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; கடவுளுக்கும் சேர்த்து தான் போல.

இந்தியாவின் பணக்கார மனிதர்களை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். வளர்ந்து வரும் நம் நாட்டின் சில பணக்கார கோவில்கள், கடவுள்களை பற்றி இங்கு பார்க்க போகிறீர்கள். கோவில்களுக்கு வரும் நன்கொடை, சேமிப்பு, நகைகள்/ஆபரணங்கள் போன்றவற்றை வைத்து கோவில்களின் வளம் கணக்கிடப்படுகிறது. நான் இணையத்தில் தேடி பிடித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.

பத்மநாபசாமி கோவில், திருவனந்தபுரம், கேரளா

16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விஷ்ணு கோவில்.400/500 ஆண்டுகளாக திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் கட்டுபாட்டில் இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக ரசசியமாய் இருந்த இக்கோவிலின் பொக்கிஷம், கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிவந்துள்ளது. கோவிலிலுள்ளே ஆறு பெட்டகத்தில், நான்கு அவ்வபோது திறக்கப்பட்டு, உபயோக படுத்தப்பட்டு வந்தது. திறக்க படாத இரண்டு பெட்டகத்தில் ஒன்று, உச்சநீதி மன்ற ஆணையின் கீழ் திறக்கப்பட்ட போது, அதில்  பல கோடி மதிப்புள்ள தங்க, வைர பொக்கிஷங்கள் இருப்பது தெரிய வந்தது.

மூன்றரை அடி நீளத்தில், ரத்தினம், வைடூரியம் பதிக்கப்பட்ட, தங்கத்தாலான மகாவிஷ்ணு சிலை, 18-ஆம் நூற்றாண்டு பொற்காசு குவியல்கள், ஒன்பது அடி நீளமும், இரண்டரை கிலோ அளவுள்ள தங்க அட்டிகை,  ஒரு டன் எடையுள்ள அரிசி ஆபரணங்கள், மூட்டை மூட்டையாய் தங்க/வைர பொருட்கள் என மொத்த பொக்கிஷத்தின் மதிப்பு($22 பில்லியன்) ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் திறக்க படாமலுள்ள ஒரு பெட்டகத்தில், இதை விட மதிப்புள்ள பொக்கிஷம் இருப்பதாக சொல்லபடுகிறது. இந்த தங்க புதையலின் கண்டுபிடிப்பின் மூலம், பத்மநாபசாமி கோவில் உலகின் மிக பணக்கார கோவில்களின் வரிசையில் முதலில் இருக்கிறது.



திருமலை வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவில், திருப்பதி, ஆந்திரா   

திருமலை திருக்கோவில் 10-ஆம்  நூற்றாண்டில் கட்டப்பட்டது. 16-ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசால் விரிவாக்கபட்டது. நாள் ஒன்றுக்கு 60,000 முதல் லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்லும் புனித ஸ்தலமாக  விளங்குகிறது.
     

பத்மநாபசாமி கோவிலுக்கு பிறகு, இந்தியாவின் இரண்டாம் பணக்கார கடவுளாக திருப்பதி பாலாஜி திகழ்கிறார். விக்ரகங்களுக்கு அணிவிக்கும் தங்க, வைர,வைடூரிய ஆபரணங்களின் மதிப்பே ரூ. 2000 -5000 கோடிகள்  இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எட்டு அடி உயரமுள்ள பெருமாள் சிலைக்கு 70-150 கிலோ அளவுள்ள அணிகலன்கள் அணிவிக்கப்படுகிறது. கோவிலின் உள்ள விமானம் சொக்க தங்கத்தால் ஆனது. ஒரு நாளைக்கு சராசரியாக 2.5 கோடி பணம்/ பொருள் உண்டியலில் காணிக்கையாகிறது . கோவிலின் மொத்த சொத்தும் கிட்டதட்ட ரூ. 33,000 கோடிக்கு சமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

சாய் பாபா திருக்கோவில் , சீ ரடி, மகாராஷ்டிரா


சாய்பாபா கோவில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம்  நூற்றாண்டின்ஆரம்பத்திலும் வாழ்ந்த மகானின் சமாதிதான் கோவிலாக கட்டப்பட்டுள்ளது. இந்துக்கள், இஸ்லாமியர்கள் என நாள் ஒன்றுக்கு 60,000 பக்தர்கள் வரை வருகின்றனர். விசேஷ நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் வரை வருகிறார்கள் என்று சொல்லபடுகிறது. தங்க /வைர ஆபரணங்களின் மதிப்பு ரூ.32 கோடி இருக்கும். ஓர் ஆண்டுக்கு ரூ.160 கோடிகள் வரை வருமானம் வருகிறதாம். மொத்த மதிப்பு ரூ. 3000-5000 கோடிகள் என்று சொல்லபடுகிறது.

சித்தி விநாயகர் திருக்கோவில், மும்பை, மகாராஷ்டிரா  

  
லக்ஷ்மன் வித்து மற்றும் தேவ்பாய் படேல் ஆகியோரால் நவம்பர் 19, 1801 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கோவிலிலுள்ள மேற் கூரை 3.7 கிலோ தங்கத்தால் ஆனது. வருடத்திற்கு 12-15 கோடிகள் வரை வருமானம் வருகிறது. மேலும் 144 கோடிகள் வங்கி கணக்கில் இருப்பதாகவும்,  110 கிலோ எடையுள்ள தங்கம்/வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். மொத்த மதிப்பு ரூ. 1000 கோடி என சொல்லபடுகிறது.

ஹர்மந்திர் பொற்கோவில், அமிர்தசரசு, பஞ்சாப் 



சீக்கியர்களின் நான்காம் குரு என்று சொல்லப்படும் குரு ராமதாஸ் சாஹிப் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்கதர்கள் வந்து வணங்கும் இடமாக இருக்கிறது. தடாகத்தின் நடுவே உள்ள இந்த பொற்கோவில் முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டது. கோவிலுள்ளே உள்ள  'அதி கிராந்த்' என்னும் புனித நூல் வைக்கபட்டுள்ள இடம் , விலையுயாரந்த கற்களால் பதிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 500 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. மொத்த மதிப்பு ரூ. 1000 கோடிகளுக்கு மேல் என்று சொல்லபடுகிறது. 

வைஷ்ணவோ தேவி ஆலயம் , திரிகூட மலை, ஜம்மு & காஷ்மீர் 

108 திவதேசங்களில் ஒன்றான வைஷ்ணவோ தேவி கோவில் வட மாநிலங்களில் மிகவும் பிரச்சியத்தம். நாள் ஒன்றுக்கு 50,000 பக்தர்களுக்கு மேல் வருகிறார்கள். திருவிழா காலங்களில் 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் வருவதாக சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு 40 கோடி ரூபாய் வருமானமும், வருடத்திற்கு ரூ.500 கோடி ரூபாய் வரை வருமானம் வருவதாக சொல்லபடுகிறது.
  

ஜகன்நாதர் திருக்கோவில், பூரி, ஒடிசா 

10-ஆம் நூற்றாண்டில், அனங்க பீம தேவா என்னும் ஒரிய அரசனால் சிவ பெருமானுக்கு கட்டப்பட்டது. ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து லட்ச கணக்கானோர் வந்து செல்கின்றனர். தங்கம் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்கள் மட்டும் கோடிக்கணக்கில் இருக்கிறது. மேலும் கோவிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் மற்றும் மனைகள் மட்டுமே 57,000 ஏக்கர்கள் இருக்கிறதாம். இதன் மூலம் கோவிலுக்கு ஒன்று முதல் ஐந்து கோடி வரை ஆண்டுக்கு வருமானம் வருகிறது. நாள் ஒன்றுக்கு 15 கோடி வரை வருமானம் வருகிறது. ஆண்டுக்கு 300 கோடி வரை வருமானம் வருவதாக சொல்கிறார்கள்.


குருவாயூரப்பன் ஸ்ரீ  கிருஷ்ணா திருக்கோவில் , குருவாயூர், கேரளா 

குருவாயூரப்பன் கோவில் கி.மு.3000 ஆண்டில் கட்டப்பட்டது என வரலாற்று குறிப்புகள் சொல்கிறது. நாள் ஒன்றுக்கு 50,000 - 1,00,000 பக்தர்கள் வருகிறார்கள். இக்கோவிலுக்கு சொந்தமான 600 கிலோ மதிப்புள்ள தங்க கட்டிகள், வங்கி கணக்கில் வைத்துள்ளதாக சொல்கிறார்கள். மேலும் 500 கிலோ தங்கம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது. சேமிப்பு கணக்கில் 600 கோடி ரூபாய் வைத்துள்ளதாகவும், ஆண்டுக்கு 200 கோடி வருமானம் வருகிறதாகவும் சொல்லபடுகிறது. கோவிலின் மொத்த மதிப்பு ரூ. 3000 கோடிகள் இருக்கும் என சொல்கின்றனர்.


 ஐயப்பன் திருக்கோவில், சபரிமலை, கேரளா  

17-ஆம் நூற்றாண்டில் மீண்டு கட்டப்பட்ட இக்கோவில் தென்னிதியாவில் மிக பிரபலம். 100 கோடி மதிப்புள்ள நிலங்கள் கோவிலுக்கு சொந்தம்மாக இருப்பதாக சொல்கிறார்கள். பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள், வங்கியில் சேமித்து வைக்கபடுகிறது. ஆண்டுக்கு ரூ.200 கோடி வருமானம் வருகிறதாகவும் சொல்லபடுகிறது.


மேலும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், காஷ்மீர் அமர்நாத் கோவில் என இந்தியாவில் பல பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு நன்கொடையும், வருடாந்திர சேமிப்பும் மட்டுமே பல ஆயிரம் கோடிகளை தாண்டும்.


இந்தியாவின் பணக்கார கோவில்கள் / கடவுள்கள் என்று இணையத்தில் தேடி பார்த்ததில், இந்த சில (இந்து) கோவில்கள் மட்டுமே கிடைத்தது. ஏனோ கிறுஸ்துவ தேவாலயங்களும், இஸ்லாமிய மசூதிகளும் தேடலில் இடம் பெறவில்லை. தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் இது போன்ற கணக்கிலடங்கா சொத்துக்கள் பல உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.   

பாரத ரிசர்வ் வங்கியின் கூற்றுபடி, இந்தியாவில் கோவில்களுக்கு சொந்தமான தங்கதின் சேமிப்பு அளவு மட்டும் 30,000 டன்! இந்த கோவில்களில் உள்ள விக்ரகங்கள், கோபுரங்கள், கலசங்கள், மேற்கூரைகள் என பெரும்பாலும், சொக்கத்தங்கத்தால் ஆனவை. கடவுள் சிலைகளுக்கு போடப்படும் நகைகளும், பட்டு பீதாம்பரமும், நவரத்தினங்களால் பதிக்கப்பட்டவை.  

இவையெல்லாம் யாருக்காக? டன் டன்னாக தங்கமும், கோடி கோடியாக பணமும் யாருக்காக சேர்த்து வைக்கிறார்கள் என புரியவில்லை. கோவிலுக்கு சொந்தமான அறக்கட்டளைகள் மூலமாக மக்களுக்கு உதவுகின்றனர் அல்லது பணத்தை செலவு செய்கின்றனர் என்றே வைத்து கொண்டாலும், மீதம் உள்ள பல ஆயிரம் கோடிகள் எல்லாம் கடவுளின் பெயரில் 'கோவில் சொத்து ' என்றும் பொக்கிஷம் என்றும் சேமித்துதான் வைக்கப்படுகிறது.

இந்த கோவில் சொத்துகளெல்லாம், சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் போலதான். ஒரே ஒரு வித்தியாசம். சுவிஸ் வங்கிகளில் சேர்க்கப்பட்டதுக்கு கணக்கு கிடையாது; இதற்கு உண்டு. இரண்டும் நம் நாட்டுக்கு செலவு செய்ய வேண்டியவை தான். ஆனால் செலவு செய்ய முடியாது!

இந்த பணத்தை/ பொக்கிஷங்களை நல்வழியில் நாட்டு மக்களுக்கும் / சமூக வளர்ச்சிக்கும் உபயோகபடுத்தினால் நாடு வளம் பெரும். நம்மூர் அரசியல்வாதிகள் நல்லதொரு திட்டம் தீட்டி, இந்த பொக்கிஷங்களை உபயோகப்படுத்தினாலே போதும், பல ஆண்டுகளாக நாட்டில் உள்ள பற்றாகுறைகளெல்லாம் இதன் மூலம் பறந்து விடும். இவையெல்லாம் எப்போது  நம் அரசுக்கும், கோவில் தேவஸ்தானங்களுக்கும் உணர்ந்து செயல்படுமோ, அன்று தான் நம் பாரதத்தின் முன்னேற்றம் ஆரம்பம் ஆகும்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies