சென்னை:-ரஜினி நடிப்பில் உருவாகி வருகிறது லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஹீரோயின்கள். ஏற்கனவே இதன் ஷூட்டிங் கர்நாடகாவில் மைசூர், பெங்களூர் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் நடந்தது.
இதையடுத்து ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்தது. இதையடுத்து சென்னையில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.இதற்கிடையில் மீண்டும் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் லிங்கா ஷூட்டிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக அப்பகுதியில் பிரமாண்ட அணை செட் அமைக்கப்படுவதுடன் அருகிலேயே பிரமாண்ட சிவபெருமான் சிலையும் அமைக்கப்படுகிறது.
இந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் தகவல் கசிந்தால் அங்கு கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினமான பணியாகிவிடும் என்று பட குழுவினர் கருதுகின்றனர். ரஜினியின் பிறந்த நாளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்னதாக தீபாவளி தினத்தில் ஆடியோ வெளியிட ஏற்பாடு நடக்கிறது.