இந்தியக் குடி மக்கள் அனைவரும் அடங்கிய தரவுத்தளம் ஒன்றை உருவாக்க உள்ளது மத்திய அரசு . இதனை உருவாக்கி அவர்களுக்கு ஒரு ஐ.டி கார்ட் வழங்கப்படும் . இதன் மூலம் இந்தியாவின் குடிமகன்கள் யார் என்று அறிந்து கொள்ளலாம் . இதற்கான முயற்சியை தொடங்கிவிட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது .
இந்த ஐ.டி கார்டை பெற தகுதிகள் என்ன ??
பிறப்பு சான்றிதழ் , நில ஆவணம் உள்ளீட்ட முக்கிய ஆவணங்களில் ஒன்றை நாம் இந்தியக் குடிமகன் என்பதற்கு அடையாளமாக காட்ட வேண்டும் . இது போன்ற ஆவணங்கள் இல்லாத கிராமப்புற மக்களுக்கு வேறு முறை பின்பற்றப் படும் .
2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வேயில் இந்தியாவில் வாழ்கிற 85 சதவீத மக்கள் இந்தியாவின் குடிமக்கள் . 2 சதவீதம் பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் .
இந்த ஐ.டி கார்ட் தயாரிக்க 4,000 கோடி வரை செலவாகும் என்று கணிக்கின்றனர் . இந்த அடையாள அட்ட வழங்குவது உட்ப்பட அனைத்தும் 2014 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தது .