வீடு கட்டுவதை நாம் எவ்வாறு பார்த்து பார்த்துக் கட்டுகிறோமோ அதேப் போன்று நமது வீட்டிற்குள் இருக்கும் பீரோவும் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம் . ஒருவேளை அந்த பீரோவை நமது ஆசைக்கேற்ப நாமை டிசைன் செய்தி கொள்ளலாம் என்றால் எப்படி இருக்கும் . இது தான் உங்கள் ஆசை என்றால் , உங்கள் ஆசையை எளிதாக நிறைவேற்றி விடலாம் . ஆம் , உங்கள் பீரோவை டிசைன் செய்ய மொபைலில் புதிய அப்ளிகேஷன் வந்துள்ளது .
இந்த் அப்ளிகேஷனை அர்பன் லேடர் என்னும் மரச்சாமான் செய்யும் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்த அப் மூலம் உங்களுக்குப் பிடித்த பீரோவை டிசைன் செய்து , நீங்கள் நிறுவனத்திற்கு அனுப்பலாம் . பின்னர் அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள் . இந்த டிசைனை நீங்கள் ஆப்-லைனில் செய்யலாம் . ஆனால் விலை மற்றும் மற்ற தகவல்கள் பெற நெட் தேவை .
இந்த அப்ளிகேஷனின் பெயர் அர்பன் ஸ்டோரேஜ் .