கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் தலைவா படம் ரிலீஸ் ஆனது, தமிழகத்திலு, புதுச்சேரியிலும் தவிர. இது விஜய் ரசிகர்களுக்கு மிகவும் கவலையை உண்டாக்கியது. உலகமே தங்களுக்கு பிடித்த நடிகரின் படத்தை பார்க்கிறது ஆனால் ஒரு ரசிகனாக நம்மலால் பார்க்க முடியவில்லையே என்று . சில தீவிர ரசிகர்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் சென்று படத்தை பார்த்து விட்டு வந்தார்கள். அனைவருக்கும் தெரியும் இந்த படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளிவராததற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா அரசு தான் என்று . பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்த படம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று வெளிவந்தது.
இந்த நாள் குறித்து விஜய் ரசிகன் ஒருவன் செய்த பதிவு ,
ஆகஸ்ட் 9,
இது விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்.
ஒரு நடிகனை பார்த்து அரசாங்கமே பயந்த நாள்.
சாதாரண ரசிகனை வெறியனாக மாற்றிய நாள்.
ஒரு நடிகனை தலைவனாக உயர்த்திய நாள்.
இது தமிழ் சினிமாவின் கருப்பு தினம்.
படம் வெளிவராததால் விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது போல தங்கள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தராமல் ஒரு படத்துக்கு முக்கியத்துவம் தந்தால் உங்கள் வாழ்க்கையில் என்றுமே கருப்பு தினம் தான் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.