இந்திய ஆட்சிப் பணியில் 36 ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.டி.பிரதான், 1998 முதல் 2003 வரை சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் எழுதிய ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அண்ட் சோனியா’ என்ற புத்தகம் அண்மையில் வெளியானது. இதில் ராஜீவ் காந்தி கொலை பற்றிய முக்கியமான செய்தியும் வந்து உள்ளது.
1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி தற்கொலைப்படை தாக்குதலால் உயிரிழந்தார். இது விடுதலை புலிகள் நடத்திய தாக்குதல் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஒருவர் ஊடுருவி யுள்ளார். அவர் ராஜீவ் காந்தி பற்றிய முக்கியமான செய்திகளை விடுதலை புலிகளுக்கு அனுப்பியிருக்க கூடும் என கூறியுள்ளார். இதே கருத்தை தான சோனியாவும் கொண்டுள்ளார் என உறுதியாக கூறுகிறார்.