பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தற்போது நடித்து வரும் படம் டேர்டி பாலிடிக்ஸ். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளிவர உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வந்தது. அதில் நடிகை மல்லிகா ஷெராவத் நமது நாட்டின் தேசிய கொடியை வைத்து தனது பெண் உறுப்புகளை மறைத்து கொண்டு இருப்பார். அவர் வேறு எந்த ஆடையும் அணிந்து இருக்க மாட்டார். சிவப்பு விளக்கு உள்ள காரின் மீது அமர்ந்து இருப்பார்.
அவர் மீது இந்த செயலால் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரின் பின்னால் உள்ளது ராஜஸ்தான் சட்டசபை ஆகும். இந்த போஸ்டர் இந்திய தேசிய கொடி மற்றும் ராஜஸ்தான் சட்டசபை ஆகிய இரண்டையும் அவமதிப்பது போல் இருப்பதாகும். எனவே இது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு உள்ளது.