1950 டிஏ என்னும் விண்கல் நம் உலகத்தை 2880 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி உலகை தாக்கும் என கணக்கிட்டுள்ளனர் . ஆனால் அதற்குள் அந்த விண்கல் உலகை தாக்காமல் இருக்கும் வழிமுறைகளை கண்டுபிடித்து விடலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர் . இந்த 1950 டிஏ விண்கள் 2880 ஆம் ஆண்டு உலகை தாக்க 0.3 சதவீத வாய்ப்புகள் தான் இருக்கிறது .
இந்த விண்கல் 1 கிமீ அளவு விட்டம் கொண்டது . ஒரு நொடிக்கு 9 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறது . இந்த வேகத்தில் இந்த விண்கல் துகள் துகள்களாக பிரிந்து விட வேண்டும் . ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை .
இந்த விண்கல் ஒரு வேளை பூமியை தாக்கினால் 44,580 மெகா டன் அளவு குண்டு வெடித்தால் என்ன தாக்கம் இருக்குமோ அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் . மேலும் சுனாமியை ஏற்படுத்தும் . உயிர்களுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும் .
ஆனால் அதற்குள் இந்த விண்கல்லின் பாதிப்பை தடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் .