அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த சீனாவில் , இன்னும் ஒரு கடுமையான கட்டுப்பாடை அறிவித்துள்ளது சீன அரசு . அந்த கட்டுப்பாடுகளின் படி வீ சாட் , வாட்ஸ் அப் போன்ற இன்ஸ்டான்ட் மெசெஜிங் அப்ளிகேஷன்களை பயன்படுத்துபவர்களுக்கு சில கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது .
புதிய விதிகளின் படி ,
1) தங்களுடைய உண்மையான பெயருடன் அவர்கள் இந்த அப்ளிகேஷன்களில் பதிவு செய்ய வேண்டும் .
2 ) சீனாவில் உள்ள சோஷலிஸ்ட் அமைப்பிற்கு முழு ஆதரவு தருகின்றோம் என ஒப்பந்தம் செய்ய வேண்டும் .
3) அரசிடம் இருந்து அனுமதி பெறாத எந்தவொரு அரசியல் செய்திகளையும் பரப்பக் கூடாது .
இந்த விதிமுறைகள் வீ சாட் என்னும் அப்ளிகேஷனை குறி வைத்து விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது .