அஜித் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது அஜித்தின் 55 வது படமாகும். அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இதற்கு அடுத்து தலயின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள்.
அஜித்தின் 56 வது படத்தை அவருக்கு வெற்றி படத்தை தந்த வீரம் படத்தின் சிவா இயக்குகிறார். இந்த படத்தை பற்றி ஒரே வரியில் சொல்லி அஜித்திடம் ஒ.கே. வாங்கிவிட்டார் சிவா. வீரம் படத்தை போல் இதிலும் அதிகமான நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளார்கள். வீரம் படத்தை விட இந்த படம் நன்றாக இருக்க வேண்டும் என சிவா உழைத்து வருகிறார். அஜித்தின் 55 வது படம் முடிந்தவுடன் அவருக்கு ஒரு ஆபரேஷன் நடக்க உள்ளது. அதன் பிறகு இந்த படத்தில் நடிக்க உள்ளார்.