இந்தியா ஏ அணியில் சிறப்பாக விளையாடி நடந்து முடிந்த தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று பயிற்சியாளர் அபய் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய ஏ அணி இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த தொடரில் இளம் வீரர் சஞ்சு சாம்சன் அதிக ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.அது மட்டுமல்லாது கீப்பிங் விடயத்திலும் சிறப்பாக செயல்பட்டார்.
இந்தத் தொடரில் 7 இன்னிங்ஸ்களில் அவர் 244 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் ஆனார்.
இது பற்றி இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் அபய் ஷர்மா ஆங்கில இணையதளம் ஒன்றில் கூறுகையில், சஞ்சு சாம்சன் நிச்சயம் இந்தியாவின் எதிர்காலம் என்றே கூறலாம்.
சூழ்நிலைக்கு ஏற்ப அவர் தன்னை மாற்றிக் கொண்டு ஆடுவது அபாரம். அவுஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவரது இன்னிங்ஸ் மிகத் தரமாக இருந்தது.
போட்டியைத் தோல்வியின் விளிம்பிலிருந்து வெற்றி பெறும் நிலைக்கு அருகில் கொண்டு வந்தார். துடுப்பாட்டத்தில் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவரது கீப்பிங் திறமை நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. லெக் திசையில் வந்த பந்தை பிடித்து அவர் செய்த ஸ்டம்பிங் அருமையானது என்று புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.