கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா நடித்துவரும் புதிய படத்தின் அஜித்துக்கு இரண்டு கெட்டப் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
ஒரு கதாபாத்திரம் சால்ட் & பெப்பர் லுக்கில் வரும் அஜித்தாகவும், இன்னொரு கதாபாத்திரம் இளமையான இருப்பது போலவும் கதையில் வருகிறது. படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் தற்போது ப்ளாஷ்பேக் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். இதில்தான் அஜித் இளமைத் தோற்றத்தில் வருவது போன்ற காட்சிகள் இருக்கிறது.
அஜித்தை நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் இளமைத் தோற்றத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தற்போது அந்த கதாபாத்திரத்தின் புகைப்படம் எப்படியோ வெளிவந்துள்ளது. அஜித்தின் இந்த புகைப்படத்தை இணையத்தளங்களில் பார்த்த படக்குழுவினர் சற்று அதிர்ந்து போயுள்ளனர்.
இரகசியமாக வைத்திருக்க நினைத்த கேரக்டர் இப்படி வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டதே என்று தலையை பிடித்துக் கொண்டிருக்கிறாராம் கௌதம் மேனன்.