சீனாவின் ஐ-போன் என்று அழைக்கப்படும் சியோமி எம்.ஐ-3 மொபைல் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது . இந்த மொபைலை வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்து இருந்தால் , இந்த 5 விஷயங்களைக் கண்டிப்பாக படியுங்கள் :
1 ) எளிதாக வாங்கிவிட முடியாது :
இந்த மொபைல் பிளிப்கார்ட் நிறுவனத்தில் மட்டுமே விற்பனைக்கு வருவதால் ,வந்த வேகத்தில் விற்று விடுகிறது . மிக குறைந்த அளவில் மட்டுமே வருவதால் அது பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதில்லை . எனவே உங்களுக்கு உடனடியாக மொபைல் கிடைக்க வேண்டுமானால் , உங்களுக்கு எதாவது அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும் .
2 ) மெமரி கார்ட் பயன்படுத்த முடியாது :
மொபைலுடன் நீங்கள் பயன்படுத்த அவர்கள் 16 ஜிபி கொடுத்தாலும் , உங்களால் தனியே மெமரி கார்ட் பயன்படுத்தி , மெமரியை அதிகப்படுத்த முடியாது .
3 ) ஹெட்போன் கொடுப்பதில்லை
நீங்கள் சியோமி மொபைலை வாங்கினால் , உங்களுக்கு சார்ஜர் மற்றும் , யு.எஸ்.பி கேபில் மட்டுமே கொடுக்கப்படும் . ஹெட்போன் நீங்கள் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் . மேலும் சியோமி மொபைல் தங்களுக்கென்று தனியே ஸ்கிரின் கார்ட் , மற்றும் மொபைல் ஹெட்செட் அறிமுகப்படுத்தவில்லை . எனவே நீங்கள் வேறு நிறுவனத்தை தான் பயன்படுத்த வேண்டும் .
4 ) சேவை மையங்கள்
போனை வாங்கும் முன்னர் அனைவரும் கேட்கும் கேள்வி , சேவை மையம் இருக்கிறதா என்பது தான் . சியோமி இந்தியாவில் சில இடங்களில் சேவை மையம் திறந்து இருக்கிறது . ஆனால் சேவைத் தரம் பற்றி இனிமேல் தான் தெரிய வரும் .