இனி வாட்ஸ் அப் மூலம் போலீஸ் மீது புகார் அனுப்ப புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது டெல்லி போலீஸ். டெல்லி போலீஸில் புகார் தெரிவிக்க தற்போது, ‘1064’ மற்றும் ‘1800111064’ ஆகிய இரண்டு எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில 20 போலீஸார் 24 மணி நேரமும் இந்த எண்களில் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்போது இதே நம்பருக்கு வாட்ஸ் அப் மூலமும் புகார் அளிக்கும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இது டெல்லி போலீஸை பற்றி புகார் தெரிவிப்பதற்கு தொடங்கப்பட்டு உள்ளது. டெல்லி போலீஸார் எங்காவது லஞ்சம் வாங்கினாலோ அல்லது பொது மக்களிடம் தவறாக நடந்து கொண்டாலோ, அது குறித்து தகுந்த ஆதாரங்களுடன் போலீஸுக்கு வாட்ஸ் அப்பில் அந்த தகவல்களை அனுப்பலாம். அந்த ஆதாரம் போட்டோவாகவோ, ஆடியோவாகவோ, வீடியோவாகவோ இருக்கலாம். அந்த ஆதாரங்கள் உண்மைத்தன்மை தடயவியல் அறிவியல் துறை உதவியுடன் சரிபார்க்கப்படும். அவை உண்மை என தெரிய வந்தால் அந்த போலீஸ் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போது இந்த வசதி குறித்து பொது மக்களிடம் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதில் என்ன குறை என்றால் சிலர் இது தவறான ஆதாரங்களை அனுப்பி போலீஸுக்கு தேவை இல்லாத வேலைகளை தர நேரிடும். மற்றபடி இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம் தான் எனபதில் ஐயம் இல்லை.