BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 12 August 2014

கோல்கேட் பேஸ்ட் 30 ஆண்டுகளாக செய்த‌ ஏமாற்றுத்தனம்


கறுப்புநிறக் குச்சிகள் கொண்ட பல்துலக்கும் பிரஷ்ஷை அறிமுகப்படுத்தியிருக்கிறது கோல்கேட் நிறுவனம். அதில் கரித்தூள் (charcoal) இருக்கும் என்றும் அதனால் வெள்ளைக்குச்சிகள் கொண்ட பிரஷ்ஷைவிட இது நன்றாக ஊடுருவி பற்களைத் துலக்கும் என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கோல்கேட் உப்பு (salt) பேஸ்ட்டும் சந்தையில் விற்பனையாகி வருகிறது.

இதே கோல்கேட் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று 30 ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் திரையிடப்பட்டு வந்தது.

ஒரு பயில்வான் அதிக எடையைத் தூக்கி பலத்த கைதட்டலுடன் பரிசு வாங்குவார். அவ்வளவு எடையைத் தூக்கிய அந்த பயில்வான் ஒரு சாதாரண சோளக்கதிரைக் கடிக்கும்போது பல்வலியால் துடிப்பார். அதிலிருந்து மீள்வதற்கு, கரித்தூளும் உப்பும் கலந்த கலவையால் பல்துலக்கத் தயாராவார் பயில்வான். அப்போது ஒரு குரல் ஒலிக்கும்.

“உடம்புக்கு பாலும் பாதாமும். பல்விளக்க உப்பும் கரித்தூளுமா?” எனக் கேட்டு, கோல்கேட் டூத்பவுடரை பயன்படுத்தும்படி அந்தக் குரல் பரிந்துரைக்கும். உப்பும் கரித்தூளும் வேஸ்ட். கோல்கேட் டூத்பவுடரும் டூத்பேஸ்ட்டும் சிறந்தவை என்றும் நல்ல பலன்தரக்கூடியவை என்றும் விளம்பரம் செய்து, சந்தையை ஆக்கிரமித்து, வியாபாரத்தைப் பெருக்கிய அதே கோல்கேட் நிறுவனம்தான், உப்பு பேஸ்ட்டையும் கரித்தூள் பிரஷ்ஷையும் இப்போது வியாபார நோக்கத்துடன் விளம்பரம் செய்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன் உப்பையும் கரித்தூளையும் தவிர்க்கச் சொன்ன கோல்கேட், இப்போது அந்த இரண்டையும் வைத்து பல் துலக்கச் சொல்கிறது. இதைத்தானே அந்த பயில்வானும் செய்தார்?

பெருநிறுவனப் பயில்வான்களிடம் உண்மையான பயில்வான்களே ஏமாறும்போது விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்களை வாங்கும் சாதாரணமானவர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்?
---
பிரபல பத்திரிக்கையாளர் கோவி.லெனின் அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி கோல்கேட்டின் ஏமாற்றுத்தன விளம்பர‌த்தை அம்பலப்படுத்தியுள்ளார்

https://www.facebook.com/govi.lenin/posts/822238987795152

30 years back colgate paste advertised that using charcoal and salt to brush the tooth is unhealthy for tooth, but now colgate introduced charcoal brush and salt in paste.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies