இந்தியாவில் தன் விற்பனையை உயர்த்தும் விதமாக , ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய மொபைல்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது . இந்த முயற்சியின் முதல் கட்டமாக தன்னுடைய 8-ஜிபி ஐ-போன் மொபைலை 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர் .
இந்த அதிரடி விலைக் குறைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது . ஐ-போன் 4 இன் உண்மை விலை 26,000 ரூபாய் . 10,000 ரூபாய் குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளனர் .
இதன் மூலம் சியோமி , சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கலாம் என ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது .