இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே இங்கிலாந்தில் தற்போது நடை பெற்று வரும் டெஸ்ட் தொடரில் தொலைக்காட்சி வர்ணனையாளராக பணி புரிந்து வருகிறார். 4 வது டெஸ்ட் முடிந்த பிறகு கவாஸ்கர் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அவர் காரில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
திடீரென அவர் சென்று கொண்டு இருந்த கார் எதிரே வந்த கார் மீது மோதும் நிலைக்கு உள்ளானது. இதனை தடுக்க டிரைவர் நினைத்தார். எதிர்பாராத விதமாக வேறு கார் மீது மோதியது. இதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது அதிர்ஷ்ட வசமாக கவாஸ்கர் உயிர் தப்பினார். கடவுளின் அருளால் தான் உயிர் தப்பியதாக கவாஸ்கர் கூறி இருந்தார்.