மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக தொகை பெற்று மது வகைகளை விற்பனை செய்வது போன்ற முறைகேடுகள் நிகழ்வதாக வந்த புகாரில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலிருந்து சோதனை நடத்த உத்தரவிட்டப்பட்டது. இதனை அடுத்து திருச்சியில் உள்ள 230 மதுக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் கணக்கில் இருப்பதை விட அதிக தொகை இருந்தது . இதனால் அவர்கள் அதிக தொகைக்கு விற்பது தெரிய வந்தது.
அதன் பிறகு தொடர் விசாரணைக்குப் பின்னர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் 9 பேர், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் உள்பட 61 பேரை தாற்காலிக இடைநீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.