BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 14 August 2014

3-வது திருமணத்துக்கு தயாராகும் யுவன்?

தமிழ் திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளையமகனான இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்டார். இவருடைய திரையுலக வாழ்க்கை பிரகாசமாக அமைந்ததுபோல், இவருடைய குடும்ப வாழ்க்கை அமையவில்லை.

கடந்த 2005-ம் ஆண்டு சுஜாயா சந்திரன் என்பவரை திருமணம் செய்த யுவன், அடுத்த மூன்று மாதங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு லண்டனைச் சேர்ந்த ஷில்பா என்பவரை 2011-ம் ஆண்டு திருமணம் செய்தார். தற்போது, இவரிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, ஷில்பா இவரை பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தனது அம்மாவின் மரணம், இரண்டாவது மனைவியுடன் சலசலப்பு என மிகுந்த மனக்கஷ்டத்தில் இருந்த யுவன், திடீரென இஸ்லாம் மதத்துக்கு மாறினார். சமீபத்தில்கூட ரம்ஜான் பண்டிகையன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திவிட்டு வந்தார்.

சமீபகாலமாக இவர் தனிமையில் இருப்பதாக உணர்வதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறாராம். குடும்பமாக வாழ ஆசையாக இருப்பதால் யுவன் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது முஸ்லீம் மதத்துக்கு மாறியுள்ளதால் முஸ்லீம் பெண்ணையே திருமணம் செய்துகொள்ள போகிறாராம்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies