
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் உள்ளது. நேற்று காலை 11 மணிக்கு ஜித்தார் நாட்டில் இருந்து 371 பயணிகள் மற்றும் 19 ஊழியர்களுடன் வந்தது. விமான ஓடுதளத்தில் இறங்கியதும் விமானத்தின் இடது புறம் உள்ள டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் விமானம் தாறுமாறாக ஓடியது. பயணிகள் அலறி சத்தம்போட்டனர். எனினும் விமானியின் சமர்த்தியத்தால் ஓடுபாதையிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த விபத்தில் இருந்து 380 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து விசாரணை நடத்தியபோது விமான ஓடு தளம் குண்டும் குழியுமாக இருந்தால் டயர் வெடித்தது தெரியவந்தது. விமான ஓடுதளம் குண்டும் குழியுமாக உள்ளதாக புகார் கூறப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால் இந்த விபத்து நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
