டிவிட்டர் தன்னுடைய பயனாளர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது . அந்த அறிக்கையின்படி டிவிட்டரில் 270 மில்லியன் அடிக்கடி லாகின் செய்து பயன்படுத்தி வருகின்றனர் . அந்த 270 மில்லியனில் 23 மில்லியன் அக்கௌண்ட்கள் பாட் எனப்படும் பேக் அக்கொண்ட் .
பாட் என்றால் என்ன ??
பாட் என்பது தானாகவே டிவிட் செய்திடும் வகையில் எழுதப்பட்ட ஒரு ப்ரோகிரம் .
21 மில்லியன் அக்கொண்ட்கள் இந்த பாட் என்பதால் இயக்கப்பட்டு வருகிறது . அதாவது இந்த அக்கௌண்டக்குள் யாரும் லாகின் செய்து உள்ளே சென்று டிவிட் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை . பிரோகிரம் எதற்கு எழுதப்பட்டு இருக்கிறதோ அதற்கேற்ற வகையில் அதுவே டிவிட் செய்து கொள்ளும் .
எடுத்துக்காட்டாக பிக் பென் என்னும் அக்கௌண்ட் இருக்கும் . அது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அந்த மணிக்கு ஏற்றவாறு பாங் , பாங் என டிவிட் செய்து கொள்ளும் .
21 மில்லியன் என்பது 8.5 சதவீதம் ஆகும் .