அரியலூர் மாவட்டத்தையும், தஞ்சாவூர் மாவட்டத்தையும் இணைக்கும் அணைக்கரை
பாலம் பழுதான காரணத்தால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த பாலம் சரி செய்யப்பட்டு போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. இந்த
பாலத்தில் பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று இரண்டு மாவட்ட மக்கள்
கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக இன்று(திங்கட்கிழமை) சாலை மறியல்
போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கும்பகோணம் உதவி கலெக்டர் கோவிந்தராவ், உடையார்பாளையம் கோட்டாட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் திருமாறன் மற்றும் இரண்டு மாவட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் வருகிற 21–ந் தேதி முதல் அணைக்கரை பாலத்தில் பஸ் போக்குவரத்து தொடங்க இரு மாவட்ட கலெக்டர்களும் அரசுக்கு பரிந்துரை செய்து அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி 21–ந் தேதி முதல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.