காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி
தேடிவருகிறார்கள். மேலும் இது தொடர்பாக அவரது நண்பர்கள் 4 பேர் கைது
செய்யப்பட்டனர்.
இளம்பெண்ணுடன் காதல்
மும்பை பாந்திரா கிழக்கு குடிசை பகுதியை சேர்ந்தவர் ஆரிப். இவர் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தார். இந்தநிலையில், ஆரிப்பின் காதலி மீது அவரது நண்பர்கள் பிரோஸ்(வயது26), ராகேஷ் வர்மா(22), ராகுல் ரதோடு(19), ஹர்ஜத் கான்(28) ஆகியோருக்கு மோகம் உண்டானது. இதுதொடர்பாக ஆரிப்பிடம் அவர்கள் பேசினார்கள். அவரும் காதலியை விருந்தாக்குவதாக சம்மதம் தெரிவித்தார்.
இந்தநிலையில், தனது நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி, அந்த பெண்ணை ஏமாற்றி அந்த பகுதியில் உள்ள ஆளில்லாத ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் வீட்டு அறையில் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார்.
நண்பர்களுக்கு விருந்தாக்கினார்
அப்போது, ஆரிப்பின் திட்டப்படி அவரது நண்பர்கள் 4 பேரும் அங்கு வந்தனர். அவர்களிடம் ஆரிப் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும்படி கூறினார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறினார். அங்கிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் ஆரிப்பின் நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கற்பழித்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். காதலனின் சூழ்ச்சி தெரியாமல் கற்பை இழந்து தவித்த அந்த பெண் தட்டு தடுமாறி தனது வீட்டிற்கு சென்றார்.
நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். பின்னர் இது குறித்து அந்த பெண் பாந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
4 பேர் கைது
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பிரோஸ், ராகேஷ் வர்மா, ராகுல் ரதோடு, ஹர்ஜத் கான் ஆகிய 4 பேரும் மான்கூர்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஆரிப் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.