திங்கட்கிழமை அன்று வெளியிடப்பட்ட ஐ.சி.சி ஆல் ரவுண்டர் ரேங்கிங்கில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முதல் இடம் பிடித்தார் .
சென்ற போட்டியில் இந்திய அணி தோற்றாலும் , அஷ்வின் இரண்டு இன்னிங்க்சில் முறையே 40, 46 ரன்கள் சேர்த்தார் . ஆனால் பந்து வீச்சில் இவரால் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை .
372 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார் . இரண்டாம் இடத்தில் தென் ஆப்ரிக்காவின் வெரான் பிலாண்டர் 365 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் . ஷகிப் அல் ஹாசன் மூன்றாம் இடத்திலும் , ஜான்சன் 4 ஆம் இடத்திலும் உள்ளார் .