BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 2 August 2014

ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்!!!

சில விஷயங்கள் உள்ளது; அவைகளை பற்றி தனக்கு நன்கு தெரியும் என பல ஆண்கள் நினைத்து வருகின்றனர். அதே போல் அவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் சில உள்ளது. வரவு செலவை எப்படி கணக்கிட வேண்டும் என்பது ஆண்களுக்கு தெரியும். ஆனால் தன் வீட்டை சுத்தப்படுத்த சொல்லுங்கள்; சில ஆண்கள் அதனை மேலும் குப்பையாக்கி விடுவார்கள். இதனை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஆணாக இருந்தால், இந்நேரத்திற்கு "இது உண்மை இல்லை!" என நீங்கள் கூறியிருப்பீர்கள்.

இடத்தை சுத்தமாக வைத்திருக்கவும், துணிகளை துவைக்கவும், பேரம் பேசி காய்கறிகள் வாங்கவும் சில ஆண்கள் பழகி விட்டனர். ஆனாலும் கூட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னமும் உள்ளது. ஏன்? எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது தானே? கண்டிப்பாக வாழ்க்கையில் நீங்கள் தனியாக இருக்க வேண்டிய காலம் வரும். அப்போது உங்களை பார்த்துக் கொள்ள நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஏன், சில நேரம் உங்கள் காதலி உங்களிடம் சில வேலைகளை வாங்கலாம். அந்த வேலைகளை பற்றி உங்களுக்கு போதிய அறிவு இல்லாததால் அவரை ஈர்க்க முடியாமல் போவீர்கள்.

சில விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஒன்றும் தவறில்லை. அதனால் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டோம். இப்போதே அவைகளை பற்றி தெரிந்து கொள்ள தொடங்குங்கள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கியமான விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். இன்னும் தெரியவில்லை என்றால், இன்றே தெரிந்து கொள்ளுங்கள்!
       
திடமான ஆண்மை நிறைந்த கைகுலுக்கல்

நீங்கள் பிறருக்கு எப்படி கை குலுக்குகிறீர்களோ அதை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை பிறர் தீர்மானிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? லேசாக பேருக்கு கை கொடுத்தாலோ அல்லது கைகளை மிகவும் இறுக்கினாலோ, உங்கள் மீது தவறான அபிப்ராயம் உருவாக வாய்ப்புகள் உள்ளது. அதனால் திடமான ஆண்மை நிறைந்த கை குலுக்கல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கார் டயர்களை மாற்ற பழகுங்கள்

பல ஆண்கள் இதனை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் நீங்கள் யாரும் உதவிக்கு இல்லாத ஒரு நெடுஞ்சாலையில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வீர்கள்? மாற்று டயர் ஒன்று, அதனால் மாட்டும் ஆற்றல், உங்களுக்கு சமயத்தில் கை கொடுக்கும். இந்த சூழ்நிலையில் ஒரு பெண் மாட்டிக் கொண்டால், அவளின் கார் டயரை நீங்கள் மாட்ட உதவி, அவரை ஈர்க்கலாம் அல்லவா?
       
டிப்ஸ் வைக்க பழகிக் கொள்ளுங்கள்

உங்களுக்கு சேவை அளிக்கும் ஒவ்வொரு நபருக்கும் டிப்ஸ் வைக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அது உங்கள் சிகையை அலங்காரம் செய்பவராக இருக்கட்டும், மதுக் கடையில் பானங்கள் கொடுப்பவராக இருக்கட்டும் அல்லது உணவகத்தில் இருக்கும் சர்வராக இருக்கட்டும். குறைந்தபட்ச டிப்ஸை வழங்கவாவது கற்றுக் கொள்ளுங்கள்.

வீட்டை சுத்தப்படுத்துதல்

உங்கள் வீட்டை எப்படி சுத்தப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். வேக்யூம் கிளீனர், துடைப்பம் போன்றவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என கற்றுக்கொண்டு, அவ்வப்போது அவைகளை பயன்படுத்தி வீட்டை சுத்தப்படுத்துங்கள். இப்படி செய்வதால், நீங்கள் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தில் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கலாம் அல்லவா?
       
துணியை துவைத்தல்

 பல ஆண்கள் தங்கள் துணிகளை துவைக்க தெரிவதில்லை. தங்கள் வாழ்க்கையை ஹாஸ்டலில் தொடங்கும் போதோ அல்லது பேயிங் கெஸ்டாக தொடங்கும் போதோ அவர்களுக்கு இந்த பிரச்சனை தொடங்கும். துணி துவைக்க கற்றுக் கொண்டால், இப்படிப்பட்ட நேரத்தில் அது உங்களுக்கு கைக்கொடுக்கும்.

சரியான முறையில் ஆடை அணிந்து கொள்வது

நம்மில் பலரும் எப்போது பார்த்தாலும் ஜீன்ஸ் ஒன்றை போட்டுக் கொள்வோம். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அதையே தான் அணிவோம். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் நம் உடைகள் மட்டும் மாறாமல் இருக்கும். நீங்கள் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்கம் இது. நிகழ்வுக்கு ஏற்றார் போல் உடை அணிந்து கொள்ள பழக வேண்டும். அப்போது தான் நீங்களும் கவனிக்கப்படுவீர்கள்.
       
தீவிரமாக ஷாப்பிங் செய்பவர்களிடம் உடனிருக்க கற்றுக் கொள்ளுதல்

செய்வதை காட்டிலும் சொல்வதற்கு தான் இது சுலபம். ஆனாலும் கூட இதனை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஷாப்பிங் என்றால் மிகவும் பிடித்த ஒரு பெண்ணை காதலிக்கிறீர்கள் அல்லது திருமணம் செய்ய போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்; அப்படியானால் ஒவ்வொரு முறை ஷாப்பிங் செல்லும் போது அவருடன் சேர்ந்து நீங்கள் செல்ல வேண்டாமா? அப்படிப்பட்ட பயணத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் தானே?

அடிப்படை சமையலை கற்பது

வாழ்வதற்கான அடிப்படைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே? ஏன் அடிப்படை சமையலை நாம் கற்க கூடாது. கண்டிப்பாக தேவைப்படும் நேரத்தில் அது நமக்கு பெரியளவில் கை கொடுக்கும். சாதம், சில காய்கறிகள் அல்லது சாலட்கள் சமைப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள்.
   
ஹேங் ஓவரிலிருந்து மீள்வது

எல்லா வார இறுதிகளிலும் நீங்கள் சரக்கு அடிக்க முடியாது. ஆனால் சில நேரங்களில் வார நாட்களில் தொடர்ச்சியாக குடிக்கும் வாய்ப்பு உண்டாகலாம். அப்படி நடக்கையில் மறுநாள் அலுவலகத்திற்கு ஃப்ரெஷாக வர வேண்டுமல்லாவா? அதற்கு எப்படி ஹேங் ஓவரிலிருந்து மீள்வது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

ஒயின் இங்கிதங்கள்

இது கண்டிப்பாக தேவையான ஒன்று; முக்கியமாக நீங்கள் கார்பரேட் உலகத்தில் ஒரு அங்கமாக இருந்தால். ஒயின் மெனுவை எப்படி படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே போல் எவ்வளவு ஊற்ற வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உடன் வந்தவருக்காக அதனை ஆர்டர் செய்யும் போது, எப்படி செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies