தோனி என்ற கிரிக்கெட் வீரர் சர்வதேச போட்டிகளில் விளையாடி ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்றும் அவர் மீதான கிரேஸ் குறையவில்லை.
எப்போது, மஞ்சள் ஜெர்ஸியில் களமிறங்கப்போகிறார், இந்திய அணியை கிரிக்கெட் உலகின் உச்சத்தில் வைத்து அழகு பார்த்த கேப்டனுக்கு மகிழ்ச்சியான விடைபெறலைத் தரவேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தோனி, தன்னுடைய கரியரில் பார்க்காத உச்சம் இல்லை, வாங்காத பாராட்டுக்கள் இல்லை.

மூன்று ஐ.சி.சி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன், டெஸ்டில் இந்திய அணியை முதல்முறையாக முதலிடத்துக்குக் கொண்டு சென்ற கேப்டன், ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான 38 ஆட்டங்களிலேயே நம்பர் ஒன் ODI பேட்ஸ்மேன், மின்னல் வேக ஸ்டம்பிங் என சாதனைகள் ஏராளம்.
அதேபோல், யாரைப் பார்த்துப் பிரமித்து கிரிக்கெட்டுக்கு வந்தாரோ, அந்த சச்சின் டெண்டுல்கருக்கு தீரா கனவாக இருந்த ஒருநாள் உலகக் கோப்பையைத் தனது தலைமையில் சொந்த மண்ணில் வென்று கொடுத்து, ``நான் விளையாடியதில் சிறந்த கேப்டன் தோனி'' என்று அவரால் பாராட்டு பெறுவதெல்லாம் எத்தனை பேருக்குக் கிடைக்கும். இந்த நிலையில், Eurogrip Tyres-ன் 'Tread Talks' எபிசோடில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு குறித்து தோனி மனம் திறந்திருக்கிறார்.
— Telugu Dhoni fans official (@dhonsim140024) December 31, 2024
தங்களுக்குக் கிடைத்த சிறந்த பாராட்டு எது என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்குச் சற்று யோசித்துப் பதிலளித்த தோனி, ``நிறைய பேர் என்னைப் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால், `வாழ்க்கையில் நீங்கள் சிறந்து விளங்கியுள்ளீர்கள்' என்று என் மனைவி என்னிடம் கூறியதுதான் எனக்கு மிகப்பெரிய பாராட்டு." என்று கூறினார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
