BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 30 December 2024

நிகும்பலா ஹோமம்: தீராத தீமைகளையும் தீர்த்து வைக்கும் இந்த வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும்!

திருமணத் தடைகள், குடும்பத்தில் தொடர்ந்து வரும் சிக்கல்கள், வியாபார தொழில் தேக்கங்கள், மாறி மாறி வரும் மன - உடல் உபாதைகள் யாவையும் நீங்க இந்த நிகும்பலா யாகம் உதவும்.

நிகும்பலா ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

காலகண்டி, பைரவ மஹிஷி, பிரத்யங்கிரா, அதர்வண பத்ரகாளி, நரசிம்ஹி, நிகும்பலா, அகோர காளி என்று போற்றப்படும் இவள் நரசிம்மரின் பெண் சக்தி என்று விவரிக்கப்படுகிறாள். நான்கு சிம்மம் கொண்ட ரதத்தில் சிம்ம முகியாக எட்டு கைகளோடு, உக்கிரப் பார்வையோடும், துடியான வேகத்தோடும் காணப்படுபவள். சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள் என்றும் இவளை புராணங்கள் கூறுகின்றன.

அடங்காத சினம் கொண்ட நரசிம்மரை அடக்கத் தோன்றிய சரப மூர்த்தியின் இரு இறக்கைகளில் சூலினி துர்கா, பிரத்யங்கரா விளங்கினார்கள் என்கிறது புராணம். இதில் பிரத்யங்கரா வெற்றி அருளும் மூல தேவி எனப்பட்டாள். ராமாயணத்தில் ராமனுக்கு வெற்றி கிடைக்கவும், மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு வெற்றி கிடைக்கவும் உதவியவள் இந்த பிரத்யங்கரா எனும் நிகும்பலா தேவி. இவளுக்காக செய்யப்படும் ஹோமம் நிகும்பலா ஹோமம் என்றே வழங்கப்படுகிறது. ஹோமங்களில் இது உக்கிரமானது என்பர். பொதுவாக இது அமாவாசை இரவுகளில் செய்வது வழக்கம்.

நிகும்பலா ஹோமம்

ஆனால் உலக நன்மைக்காக சிறப்பு நாள்களிலும் செய்யப்படுவது உண்டு. அவ்வகையில் வரும் 12.1.25 ஞாயிற்றுக் கிழமை - ஆருத்ரா அபிஷேக நன்னாளில், மாலை 4.30 மணியளவில், மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது. நம் வாசகர்கள் பங்கேற்று பயனடையும் விதம், அற்புதமான ஒரு தலத்தில் இந்த ஹோமம் நடைபெறவுள்ளது. சிதம்பரம் - சீர்காழிக்கு இடையில் 12 கி.மீ. தொலைவில், கொள்ளிடம் அருகேயுள்ளது மேலவல்லம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி ஆலயம். இங்குதான் மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது.

வேத காலத்திலிருந்தே இங்கு வழிபாட்டில் இருந்து வந்த சிம்மக்கொற்றவை எனும் இந்த பிரத்யங்கரா தேவி துடியானவள்; தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டியவை யாவும் அளிக்கும் வரப்பிரசாதி என்று சிலிர்ப்போடு சொல்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தில் லக்ஷ்மிகணபதி, பாலமுருகன், சுவர்ணாகர்ஷண பைரவர், பத்ராதேவி, குபேரன் சகித குபேரலக்ஷ்மி ஆகியோரும் இங்கே விசேஷ வரமளிக்கும் தெய்வங்களாக அருள்கிறார்கள்.

இங்கு நடத்தப்படும் நிகும்பலா ஹோமம் விசேஷமானது. இதில் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று பெரியவர்களைக் கேட்டதில் பலவிதமான காரணங்களை அடுக்கினார்கள். அதில் சில...

1. எதிரிகளை வீழ்த்தவும், நினைத்த காரியம் கைகூடி உயர் பொறுப்புகள் பெறவும், வாழ்வில் ஏறுமுகம் காண்பதற்கும் நிகும்பலா யாகம் உதவும்.

2. திருமணத் தடைகள், குடும்பத்தில் தொடர்ந்து வரும் சிக்கல்கள், வியாபார தொழில் தேக்கங்கள், மாறி மாறி வரும் மன - உடல் உபாதைகள் யாவையும் நீங்க இந்த நிகும்பலா யாகம் உதவும்.

3. அடிக்கடி விபத்து, திடீர் ஆபத்து, கெட்ட சொப்பனங்கள், யாரோ எதுவோ செய்துவிட்டார்களோ என்ற வீண் அச்சம் எல்லாம் நீங்கவும் இந்த யாகமே சிறந்த பரிகாரம் என்றும் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

4. மகாகாளி, பிரத்யங்கரா தேவி, நிசும்பசூதனி ஆகிய உக்கிர தெய்வங்களைப் போற்றி செய்யப்படும் இந்த யாகத்தால் தீமைகள் யாவும் விலகி நன்மைகள் சூழும் என்பது நம்பிக்கை.

பிறகென்ன உங்கள் குறைகள், பயங்கள் யாவும் விலகி இன்பம் சூழ இங்கே இந்த அற்புத வழிபாட்டில் பங்கு கொள்ளுங்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

நிகும்பலா ஹோமம்

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த நிகும்பலா யாகத்தில் சங்கல்பப் பிரார்த்தனை செய்பவர்கள், கலந்துகொள்ளும் அன்பர்களுக்கு அனுப்பப்படும் புனித குங்குமம் மகிமை வாய்ந்தது. இதைப் பெற்று உங்கள் பூஜையறையில் வைத்து, மகாகாளியை அல்லது பிரத்யங்கிரா தேவியை தியானித்து நம்பிக்கையோடு நெற்றியில் பூசி வரவேண்டும். இதனால் நிச்சயம் 48 நாள்களுக்குள் உங்கள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும். செய்வினை, எதிரிகளால் அச்சம், மரணபயம் உள்ளிட்ட சகல பாதிப்புகளும் நீங்கிவிடும் என்பது விசேஷம்.

QR CODE FOR NIGUMBALA HOMAM

QR CODE FOR NIGUMBALA HOMAM

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த ஹோம வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஹோம பஸ்பம், ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies