BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 30 December 2024

விருச்சிக ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் சகல அனுபவமும் பெற்றவர்; விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்டவர். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் -  25 குறிப்புகள் இங்கே! 

1. விருச்சிக ராசி அன்பர்களே! உங்களுக்கு 2-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். 

2. பேச்சில் ஆளுமை கூடும். அனுபவபூர்வமாகவும், யதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைப்பட்ட பல காரியங்களை, இனி எளிதில் முடித்துக்காட்டுவீர்கள். 

3. குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கணவன் - மனைவிக்கு இடையே இனி மனம்விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள்.

4. இந்தப் புத்தாண்டு பிறக்கும்போது, செவ்வாய் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், நீங்கள் தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். 

5. பாதிப் பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை,  மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சிலர் புது வீடு கட்டும் பணியைத் தொடங்குவார்கள்.

6. மகளுக்கு எதிர்பார்த்த விதத்தில் நல்ல மணமகன் அமைவார். கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். சகோதரிக் கும் நல்ல இடத்தில் வரன் அமையும். தந்தையார் சில நேரங்களில் கோபப்படுவார். பொறுத்துக்கொள்ளுங்கள். 

7. உங்களில் சிலர், நவீனரக மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

8.  இந்தாண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால் மனத்தாங்கலால் தாயாரைப் பிரியவேண்டி வரும். தாய்வழி உறவினர்களுடனும் கருத்து மோதல்கள் வரலாம். 

9. குடும்பத்தினருடன் வெளியூர்ப் பயணிப்பதாக இருந்தால், முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டுச் செல்வது நல்லது. வீட்டில் களவுபோக வாய்ப்பிருப்பதால், கவனம் தேவை.

10. புத்தாண்டின் தொடக்கம் முதல் 25.4.2025 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால், எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். 

11. ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்விகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 

12. ஏப்ரல் 26 முதல் வருடம் முடியும் வரை, ராகு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் வீட்டிலும் அமர்வதால், வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். 

13. தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை-கால் வலி வந்துபோகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும்.

 14. வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

15. ஆண்டு தொடக்கம் முதல் 10.5.2025 வரை குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால், உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அழகு, அறிவு கூடும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 

விருச்சிக ராசி

16. பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புதியவர்கள் சிலர் மூலம் திடீர் திருப்பங்கள் உண்டாகலாம்.

17. மே-11 முதல் முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். திடீர்ப் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். 

18. சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களைக் கவனக் குறைவாகக் கையாள வேண்டாம். 

19. குடும்பத்தில் தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். அவருக்குச் சிறு சிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும். தாய்வழிச் சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள் வந்து செல்லும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

20. வியாபாரிகளே! பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்கப் புது திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள் என நினைத்துப் பெரிய முதலீடுகளைப் போட்டு மாட்டிக் கொள்ளா தீர்கள்.

21. பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உங்களுக்குத் தொல்லை கொடுத்த வேலையாட்கள் மாற்றிவிட்டு, அனுபவம் மிகுந்தவர்களைப் பணியில் அமர்த்துவீர்கள். 

22. இந்த ராசிக்காரர்களுக்கு ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், உணவு, எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரிப் பாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். சங்கத்தின் சார்பில் கௌரவப்பதவிகள் தேடி வரும். உங்களிடமிருந்து பிரிந்து சென்ற அனுபவமிக்க வேலையாள்கள், மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். 

23. கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.

விருச்சிக

24. உத்தியோகஸ்தர்களே! வருட முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றங்களும் வரும். மேலதிகாரியின் தவறுகளை மேலிடத்தில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை உரசிப் பார்ப்பர்கள். ஆண்டின் பிற்பகுதியில் மன நிம்மதியுண்டு. 

25. கணினித் துறையினரே! புதிய வாய்ப்புகள் வந்தால், ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு நன்மை சேர்க்கும்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies