நடிகர் நாக சைதன்யாவுக்கும் - நடிகை சோபிதாவுக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது.
நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. அடுத்த மாதம் நான்காம் தேதி இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்தையும் கூடுதல் ஸ்பெஷலாக நடத்துவதற்கு ஹைதராபாத்திலுள்ள ஒரு இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். திருமணம் குறித்தும் திருமணத்தை ஒளிபரபரப்ப ஓ.டி.டியுடன் ஓப்பந்தம் போடப்பட்டது தொடர்பாகவும் நாக சைதன்யா பிரத்யேகமாக பேட்டியளித்திருக்கிறார்.
நாக சைதன்யா, `` திருமணம் நடக்கவிருக்கும் இடம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது. திருமணம் அண்ணாபூர்னா ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல, எங்களுடைய குடும்பத்துக்கு அந்த இடம் ஒரு சென்டிமென்ட்டானது. அதுதான் இந்த நிகழ்வை இன்னும் முக்கியமானதாக மாற்றியிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் இருக்க, எனக்குள் மகிழ்ச்சியும் ஆரோக்கியமான பயமும் இருக்கிறது. பெரியளவில் சடங்கு முறைகள் பின்பற்றி திருமணம் நடைபெறவிருக்கிறது. சோபிதாவின் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் அன்பாவனர்கள்.
அவர்களின் மகனாகவே என்னை எப்போதும் கருதுவார்கள். அவர்களுடன் இணைந்து பண்டிகைகள் கொண்டாடியிருக்கிறேன். இனி வரும் நாள்களில் எங்களுடைய பந்தம் இன்னும் வலிமையாகும். திருமணத்திற்கு பிறகும் சோபிதா படங்களில் தொடர்ந்து நடிப்பார். திருமணத்தை ஓ.டி.டி-யில் ஒளிபரபரப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகிறது. அவை எதுவும் உண்மை கிடையாது. அப்படி எதுவும் ஒப்பந்தம் போடவில்லை." எனக் கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MadrasNallaMadras