காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ நான் இறைவனை வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பிறந்தநாளன்று ராகுல் காந்தி டெல்லியில் இருக்கிறார். காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் பிறந்தநாளை கொண்டாட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.