குணா மற்றும் ஷங்கர் இருவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்திற்கு 'கெட்ட பயடா இந்த கார்த்தி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனந்தி, மனிஷா யாதவ் நாயகிகளாக நடித்து வரும் இப்படத்தில் ஆர்யா, சிம்ரன் உள்ளிட்ட பலர் கெளவர வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய குணா மற்றும் ஷங்கர் இருவரும் இணைந்து இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் கதையை வெற்றிமாறன் எழுத, வசனங்களை அட்லீ எழுத இருக்கிறார்.
இப்படத்தை 'ரோமியோ ஜூலியட்' படத்தைத் தயாரித்த நந்தகோபால் தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்கு 'கெட்ட பயடா இந்த கார்த்தி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.