ஜுராசிக் பார்க் திரைப்பட வரிசையில் 4-வதாக வெளியாகி உள்ள ஜுராசிக் வேர்ல்டு திரைப் படத்தின் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடியைத் தாண்டி உள்ளது.
கொலின் ட்ரெவொரோ இயக் கத்தில் கிறிஸ் ப்ராட்-இர்பான் நடித்துள்ள இந்தத் திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் மொத்தம் 2,108 திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து யுனிவர்சல் பிக்சர்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபூரியஸ் 7’ என்ற திரைப்படத்துக்கு அடுத்தபடியாக ஜுராசிக் வேர்ல்டு திரைப்படம் இந்தியா வில் ஹாலிவுட் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது என்பதை நிரூபித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.