சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மூன்று பெண் நக்லைட்டுகள் நேற்று இரவு சரண் அடைந்ததாக பிஜப்பூர் கூடுதல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சரண்டைந்த கவிதா வயது (24) 2004-ம் ஆண்டு மாவோயிஸ்ட் பைரம்கர் உறுப்பினராக பணியாற்றி வந்தார்.பின்னர் மாஜி என்ற படைப்பிரிவில் இரண்டாவது கமெண்டராக இருந்து வந்தார்.
மேலும் இரண்டு பெண்களும் சரணடைந்துள்ளனர் சீமா வயது (30), சுனிதா வயது (22) ஆகியோர் உள்ளூர் கொரில்லா அணியின் உறுப்பினராக பணியாற்றி வந்தனர்.
சரண்டைந்த மாவோயிஸ்ட்டுகளுக்கு மாநில அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் அனைத்து தேவையான உதவிகள் வழங்கப்படும் இவ்வாறு மாவட்ட ஏஸ்பி இந்திரா கல்யான் கூறினார்.