பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. 20 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்படும் மத்திய அமைச்சரவையில் கோவா முதவர் பதவியை ராஜினாம செய்துள்ள மனோகர் பரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. நேற்று புதுதில்லியில் நடந்த பா.ஜ.க நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய அமைச்சரவியில் புதிதாக இடம் பெற உள்ள 20 அமைச்சர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பா.ஜ.க மூத்த தலைவர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, மற்றும் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என தெரிகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவின் மகன் ஜெயந்தும் அமைச்சரவையில் இடம்பெறுவார். புதிய அமைச்சர்கள் இன்று பிற்பகல் பதவியேற்பார்கள் எனவும் பதவியேற்புக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு டீ விருந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.