என்ன சத்து : வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ளது. 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வைட்டமின் சியும் உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் இதில் அதிகம் உள்ளது. மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம் உள்ளது. ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகம் உள்ளது.
என்ன பலன்கள் :
வைட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது பலர் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள். இப்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.
சருமத்துக்கு மிகவும் நல்லது : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயத்துக்கு மிகவும் நல்லது. வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும்
சுவையான பழத்தைப் பற்றிய சுவையான தகவல் : இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இங்கிருந்து உலகம் முழுவதும் பரவி இப்பொது உலகெங்கும் மாம்பழங்கள் 1000 வகைகள் உள்ளன. இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர்.
தவறான புரிதல் : மாம்பழம் சூடு என்று சிலர் சொல்வார்கள். காரணம் மாம்பழத்தை சாப்பிடுகையில் அதன் சுவையில் ஈர்க்கப்பட்டு அளவு தெரியாமல் அதிகம் சாப்பிட்டுவிடுவோம். அதனால் தான் பிரச்னை. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அமிர்தமும் விஷம். எனவே இந்த சீசனில் அளவோடு மாம்பழத்தை சுவைத்து அதன் முழுப் பலன்களையும் பெறலாம். (அப்பறம் என்ன, உடனே சாப்பிடுங்க )