- காலையில் சுக்குப் பொடி, கருப்பட்டி போட்டு கொதிக்க வைத்த சுக்குவெந்நீர். (வீட்டருகே கிடைக்கும் துளசி, அருகம்புல், புதினா இலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றையும் விருப்பம் போல் போட்டு கொதிக்க வைக்கலாம்)
- காலை உணவாக தேங்காயுடன் வாழைப் பழங்கள். அரைமூடி தேங்காய் இரண்டு வாழைப் பழங்கள். மூட்டு வலி அல்லது முதுகு வலி உள்ளவர்கள் தேங்காயுடன் பேரிச்சம்பழம் உண்ணலாம்.
- பதினோரு மணிக்கு தேன் கலந்த எலுமிச்சைச் சாறு. அல்லது இளநீர்.
- மதிய உணவாக தேங்காய்ப்பூ, வெல்லம் சேர்த்து ஊறவைத்த அவல். (அவல் இயற்கை உணவு அல்ல என்றாலும் மதிய உணவு சற்று வயிறு நிரம்ப இருந்தால்தான் சிலருக்கு பிடிக்கும்). அல்லது பருவத்திற்கேற்ற பழங்கள். விலை குறைவாகவும் இருக்கும், சத்தானதாகவும் இருக்கும்.
- மாலை 5 மணிக்கு பீட்ரூட், கேரட், வெள்ளைப் பூசணி, சிறிது புடலங்காய், தேங்காய், இவற்றைத் துருவி மிளகு சேர்த்து (உப்பு வேண்டாம்) உண்ணலாம். அல்லது காய்கறிகளை வேக வைத்து ஒரு சாறு (சூப். இது இயற்கை உணவல்ல என்றாலும் மாலையில் தேனீர் குடித்தே பழக்கப்ப்டட நமது நண்பர்களுக்காக சிறப்புத் தள்ளுபடி)
- இரவு உணவாக பப்பாளி, மாதுளை, ஆரஞ்சு (இப்பொழுது பருவ காலம் எனவே விலை குறைவு), வாழைப் பழங்கள் இவற்றில் ஏதேனும் ஒரே கனியை உண்ணலாம்.
காலை முதல் இரவு வரை, எல்லோருக்கும் பொதுவான உணவு என்பது தேங்காயும் வாழைப் பழங்களும்தான்.