இந்திய திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவாவில் வரும் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொள்கிறார்.
இந்திய திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த்துக்கு நிகழாண்டுக்கான சிறந்த இந்திய திரைப்பட கலைஞருக்கான நூற்றாண்டு விருது வழங்கப்படும். சீன திரைப்பட இயக்குநர் வாங் கர்வய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். ஈரான் திரைப்படமான "தி பிரசிடென்ட்' விழாவின் தொடக்கத்திலும், சீனத் திரைப்படமான "தி கிராண்ட் மாஸ்டர்' விழாவின் இறுதியிலும் திரையிடப்படும். 75 நாடுகளின் 179 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன என்று கூறினார்.