லிங்கா இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக அரங்கேறியது. இதில் பல முன்னனி நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.இவ்விழாவில் பேசிய சந்தானம் ‘ நான் சூப்பர் ஸ்டாரிடம் அன்பு, ஆசைக்கு என்ன வித்தியாசம் ரஜினியிடம் கேட்டேன். அவர் உடனே ஆயாவுக்கும், அனுஷ்காவுக்கும் என்ன வித்தியாசமோ அதுதான் என்றார், எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை’ என்று கூறினார்.மேலும் ஒரு தெய்வத்தை பார்ப்பது போன்ற இந்த மாதிரி ரசிகர்களையும் பார்த்ததில்லை,ரசிகர்களை தெய்வமாக நினைக்கும் நடிகரையும் பார்த்ததில்லை என்று சந்தானம் கூற அரங்கமே அதிர்ந்தது.இதை தொடர்ந்து இயக்குனர் சேரன் ’உலகத்தில் எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் தான் அதிக ரசிகர்கள் உள்ளனர், அதில் நானும் ஒருவன்’ என்றார்.அதேபோல் பாடலாசிரியர் வைரமுத்து ‘எந்த முடிவையும் அவர் மேல் திணிக்க முடியாது, ஆனால், அவர் முடிவெடுத்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது’ என்று தெரிவித்தார்.இறுதியாக பேசிய கேப்டன் ஆப் தி ஷிப் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் ’ரஜினிக்கு மட்டும் தான் நாளுக்கு நாள் வயது குறைந்துக் கொண்டே இருக்கிறது, அவர் ஐஸ்வர்யா ராயுடனும் ஜோடி சேர்வார், அனுஷ்காவுடனும் ஜோடி சேர்வார்’ என்று கூறி மேடையை அதிர வைத்தார்.