திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி சில மாதங்களுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், அதிலிருந்து சென்னைக்கும் மதுரைக்கும் போக்குவரத்து நின்று விட்டது, அவரது தாய் தயாளு அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில் நேற்று மு.க.அழகிரி தனது மனைவி மற்றும் மகளுடன், கோபாலபுரம் வந்து, தனது தாய் தயாளுவை சந்தித்து நலம் விசாரித்தார்.
அவர் வந்த நேரத்தில் கருணாநிதி தனது மற்றொரு மகன் மு.க.ஸ்டாலின் உடன் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் கருணாநிதியை சந்திக்காமல் தனது தாயை பார்த்து விட்டு மு.க.அழகிரி உடனடியாகப் புறப்பட்டு விட்டார்.