அக்டோபர் 6 ஆம் தேதி பிளிப்கார்ட் " பில்லியன் சேல் டே " என்று தனது தளத்தில் பொருட்களை பிரம்மாண்ட தள்ளுபடியில் பொருட்களை விற்று வருகிறது . இவ்வாறு அதிரடி தள்ளுபடியில் பொருட்களை விற்றதால் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் தளத்திற்குள் வந்தனர் . இதனால் இணையதளம் கிராஷ் ஆனது .
இந்த அதிரடி விற்பனை காலை 8 மணி முதல் தொடங்கியது . இந்த தளம் 30 முதல் 90 சதவீதம் வரை பொருட்களின் விலையை குறைப்பதாக தெரிவித்தது . சில பொருட்களுக்கு 99 சதவீதம் தள்ளுபடி செய்து 1 ரூபாய்க்கு பொருட்களை விற்றது . ஹுவாய் ஹானர் 6 , அல்காடெல் ஒன்டச் பையர் சி , லெனோவா வைப் ஃஸ் - 2 ஆகிய பொருட்கள் 1 ரூபாய்க்கு விற்கப்பட்டது .
சில ராசியானவர்களால் மட்டுமே இது போன்ற பொருட்களை வாங்க முடிந்தது . பலரின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது . பலர் இந்த சேலின் போது கிராஷ் ஆனதால் பிளிப்கார்ட்டை டிவிட்டரில் குறை கூறினர் .
பிளிப்கார்ட் மட்டும் இல்லாமல் ஸ்னாப்டில் தளமும் இந்த விற்பனையை தொடங்கியுள்ளது . ஆனால் ஸ்னாப்டிலின் விற்பனை மக்களை அவ்வளவாக கவரவில்லை .
பிளிப்கார்டிற்கு போட்டியான அமேசான் தளம் அடுத்த வாரம் தன்னுடைய அதிரடி விற்பனையை தொடங்கி உள்ளது .