ஹிருத்திக் ரோஷன் மற்றும் கத்ரினா கைப் இணைந்து நடித்த அக்ஷன் திரில்லர் திரைப்படமான பேங் பேங் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 71.72 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது . இந்த படம் காந்தி ஜெயந்தி அன்று வெளியானது .
பிரம்மாண்டமான அளவில் 150 கோடி ரூபாய் செலவில் வெளிவந்த இந்த திரைப்படம் இரண்டு நாட்களில் 50 கோடி என்ற இலக்கை தாண்டியது .
இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார் . இந்த படத்திற்கு விஷால் தால்தானி மற்றும் ஹேகர் ராவ்ஜியானி இசை அமைத்துள்ளனர் .