BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday 7 October 2014

பிக் பில்லியன் டேயில் நடந்த குழப்பங்களுக்காக பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட் நிறுவனம்



பிளிப்கார்டின் பிக் பில்லியன் சேல் அக்டோபர் 6 ஆம் தேதி நடந்தது . இந்த பிக் பில்லியன் சேலில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்ததால் இணையதளம் பல முறை கிராஷ் ஆகி நின்றது . எனவே பிளிப்கார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மன்னிப்புக் கோரி கடிதம் எழுதியுள்ளது .

அந்த கடிதத்தில் அவர்களின் இணையதளம் அதிக டிராபிக்கினால் பல முறை கிராஷ் ஆனதற்காக மன்னிப்பு கேட்டனர் . மேலும் வாடிக்கையாளர்கள் சந்தித்த பல சிரமங்கள் , மற்றும் பிக் சேலின் முன்னதாக விலை உயர்த்தப்பட்டது குறித்தும் எழுதி உள்ளனர் .

அவர்கள் எழுதிய கடிதம் சுருக்கமாக :

அன்பு வாடிக்கையாளரே ,

எங்களுக்கு நேற்று பெரிய நாள் . உங்களுக்கு பெரிதாக இருக்க வேண்டும் என விரும்பினோம் . ஆனால் உங்களுக்கு குறைவான நிறைவு தான் கிடைத்து உள்ளது . அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் .

நாங்கள் இது போன்ற அதிக டிராபிக் வருவதற்கும் , அதிக பொருட்களை விற்பதற்கும் நாங்கள் முழுவதுமாக தயாராக இல்லை . இதை நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் .

சில பொருட்களின் விலை உயர்ந்தது , இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் .

பல பொருட்களுக்கு சில நிமிடங்களில் அவுட் ஆப் ஸ்டாக் சென்றது . இந்த பிரச்சனையைக் கூடுதல் விரைவில் சரி செய்வோம் .

சில பொருட்கள் ஓவர் புக் ஆனதால் அவர்களுக்கு கேன்சல் ஆர்டர் அனுப்பினோம் . முடிந்த அளவு அவர்களுக்கு பொருட்களை பெற்றுதர முயற்கித்தோம் .

மீண்டும் ஒரு முறை அனைத்து வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் .

நன்றி

சச்சின் மற்றும் பின்னி .

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies