பணம் பரிமாற்றம் நடைபெறுவதற்கென உள்ள இணையதளங்களான பேபால் , வென்மோ , க்லிங்கில் ஆகிய இணையதளங்களுக்கு புதிய போட்டியாளர் உருவாக உள்ளார் .
இப்போது கசிந்த தகவல்களின்படி பேஸ்புக் மெசஞ்சர் மூலம் நாம் போட்டோக்களை அனுப்புவது போன்று பணத்தையும் அனுப்ப முடியும் . இதற்காக உங்கள் டெப்ட் கார்டை மெசஞ்சருடன் இணைக்க வேண்டும் . பின் பாதுகாப்பிற்காக தனியே ஒரு பின் அமைக்க வேண்டும் .
இது போன்று பண பரிமாற்றம் குறித்த தகவல் வருவது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது . ஒரு அதிகாரியின் தகவல் படி இந்த மெசஞ்சர் மூலமான பரிமாற்றம் டெபிட் கார்ட் மூலம் மட்டுமே செய்ய முடியும் . கிரெடிட் கார்ட் மூலம் நடத்த முடியாது . இதற்கென அவர்கள் எந்த கட்டணமும் அறிவிக்கவில்லை . எனவே ஆரம்பத்தில் சில நாட்கள் இந்த சேவை இலவசமாக வழங்கப்படலாம் என தெரிகிறது .
பேஸ்புக் நிறுவனம் இதற்கு முன் பேபால் நிறுவனத்தை வாங்க முயற்சித்தது . ஆனால் தோல்வியில் முடிந்தது .