இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் வீரர்களும் இந்திய வீரர்களும் பக்ரீத் தினம் அன்று வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பறிமாறிக் கொள்வது வழக்கம் . ஆனால் இந்த முறை எல்லைப் பகுதியில் நிறைந்து இருக்கும் பிரச்சனையால் இந்த நல்லெண்ண நடவடிக்கை முதல் முறை நடக்காமல் இருந்தது .
எல்லை பாதுகாப்பு துறை கூறுகையில் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் நுழைவதாலும் அத்துமீறுவதாலும் இந்தியப் படைகள் இனிப்புகளை வாங்க மறுத்துவிட்டது என்றனர் .
கடைசியாக நடந்த சண்டையில் காஷ்மீர் பகுதியில் 5 பொது மக்கள் இறந்தனர் . இந்த முடிவை இந்திய ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் எடுத்தனர் .
இந்த இரு பக்க வீரர்களும் முக்கியமான நிகழ்ச்சிகளின் போது ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வது வழக்கம் . கடைசியாக ஆகஸ்டு 14 , 15 தேதிகளின் போது வாழ்த்திக் கொண்டனர் .