உலகையை நனைய வைத்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச் முடிந்த பின் , இப்போது இணையத்தில் புதிதாக ஒரு சேலஞ்ச் உருவாகி வருகிறது . இதுவும் ஒரு நிதி திரட்டும் சேலஞ்சாக தான் இருக்கிறது . இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சேலஞ்சின் பெயர் வேக்அப்கால் . இந்த சேலஞ்சில் நாம் தூங்கி எழுந்தவுடன் நமது போட்டோ எடுத்து இணையத்தில் போட வேண்டும் .
இந்த சேலஞ்ச் மூலம் யுனிசெப் சிரியாவில் ஆபத்தில் இருக்கும் மக்களுக்காக நிதி திரட்டி வருகிறது . ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போன்று இதிலும் அவர்கள் சேலஞ்சை செய்து நண்பர்களை நாமினேட் செய்ய வேண்டும் . இந்த சேலஞ்ச் இதற்கு முந்தைய சேலஞ்சுகளான ஐஸ் பக்கெட் மற்றும் நோமேக்கப் செல்பி என இரண்டையும் சேர்த்து இதை உருவாக்கியுள்ளனர் .
சில பிரபலங்கள் இந்த சேலஞ்சை செய்துள்ளதால் , இதற்கு மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .