பிக் பில்லியன் டே சேலினால் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு தலைவலி கூடிக் கொண்டே இருக்கிறது . சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருள் கொடுக்க முடிந்தது . மற்றவர்களுக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியது . இப்போது இந்த கடிதம் மட்டும் போதாது என்ற நிலையில் அவர்கள் இருக்கின்றனர் . பொருள்களை பெற்றவர்களுக்கும் புதிய பிரச்சனை வந்துள்ளது.
மோடோ ஜி மொபைல் ஆர்டர் செய்த ஒருவருக்கு மொபைலுக்கு பதில் கல் வந்துள்ளது. இது குறித்து டிவிட்டரில் அந்த கஸ்டமர் செய்தி வெளியிட்டுள்ளார். பிளிப்கார்ட் மீது புகார்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவர்கள் மீது இருந்த நம்பிக்கை குறைந்த கொண்டே செல்கிறது.