அதிமுக தலைவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் . இவர் விடுதலை ஆக வேண்டுமேன மதுரை அமைச்சர் செல்லூர் ராஜூ காவடித் திருவிழா நடத்தினார் .
காவடி மட்டுமில்லாமல் வேல் குத்துதல் , பால் குடம் , பறவைக்காவடி என பல்வேறு வேண்டுதல் நடத்தி மதுரையை ஸ்தம்பிக்க வைத்தார் .
இது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்திய போதும் அமைச்சர்கள் தங்கள் செல்வாக்கு மற்றும் அம்மாவிற்கான விசுவாசத்தைக் காட்ட தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் .